ஏழையின் சிரிப்பில்


ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கிறானாம்.. ! 
இப்போது தான் புரிகிறது..!
நம் நாட்டில் முப்பத்து முக்கோடி தேவர்கள்  ஏன் இருக்கிறார்கள் என்று ..!

சிலேடையின் பொருள்


சிலேடை என்பது ஒரு சொல்லுக்குப் பல பொருள் வழங்கப் பெற்று வருவது என்பது அனைவரும் அறிந்ததே. “சொல்லுக்கு மட்டும்” என்ற எண்ணத்தில் இருந்து சற்றே வழூவி “செயலுக்கும்” அல்லது “அறிவுக்கும்” என்று சிந்தித்துப் பார்த்தால் என்ன என்று தோன்றிற்று. அதன் தாக்கமே இந்த பதிவு.

சற்றே ஆழ்ந்து சிந்தித்தால், நாம் அனைவருமே ஏறக்குறைய “சிலேடை” வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  பொதுப்புத்தியில் அனைவரும் “நல்லவராக” வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அல்லது வாழ்வதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நடைமுறையில் ஒரு வாழ்க்கையா வாழ்கிறோம் ? சில சமயம் இரட்டை வாழ்க்கை, சில சமயம் இரண்டுக்கு மேற்பட்ட வாழ்க்கை என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.

உதாரணமாக, ஏதோ ஒன்றை நண்பரிடம் சொல்லி விடுகிறோம். அது தவறாகி விட்டால் செய்த தவறை பெரும்பாலோர் ஒத்துக்  கொண்டிருக்கிறோமா என்றால் இல்லை. அந்த தவறுக்கு வியாக்கியானம் சொல்லி சரியாக்குகிறோம். நல்லதோ கெட்டதோ நம்மிடம் கேட்பவர்கள் நாம் எந்த மொழி வீச்சில் சொல்கிறோமோ அந்த வீச்சில் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அதைப் படிப்பவர்கள் அதே வீச்சில் எடுத்துக் கொள்வார்கள் என்று சொல்வதற்கில்லை.

தத்துவ நூல்களாகக் கருதப் படுகின்ற கீதை போன்ற நூல்களையும் சிலேடைகளாகத் தான் புரிந்து கொண்டிருக்கிறோம். பெரியாருடைய  தத்துவங்களையும் சிலேடைகளாகத் தான் புரிந்து கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறோம். எண்ணங்களைப் பொறுத்தே வாழ்வு பெரும்பாலும் அமைகிறது. ஆழ்ந்து சிந்தித்தால் மட்டுமே உண்மை விளங்கும்.

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும், எப்பொருள் எத்தன்மையது ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது தான் உண்மையான அறிவு என்று நம்ம தாத்தா 2000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இருக்கிறார். (இந்த மாதிரி சிலேடை இல்லாமல் வாழ்வியல் தத்துவத்தை இனிமே ஒருத்தன் பொறந்து தான் சொல்லனும்… அப்பொ கூட அது நம்ம தாத்தா சொல்லாததா என்று ஆராய்ந்து பார்த்தால் தெரிந்துவிடும்).

ஆகவே சிலேடையாக வாழாமல் சிம்பிளாகவும், சிங்கிள் வாழ்க்கையாகவும் (சிங்கிளாக அல்ல…!) வாழ்வது தான் சாலச் சிறந்தது. இல்லாவிட்டால்…

இப்படி இருப்பது..












இப்படி ஆயிடும்..!



















இப்படியும்தான்...!





















நன்றி. 

“மயிரு” பாட்டு


இந்தப் பாடலை பெரும்பான்மையானவர்கள் அறிந்திருப்பார்கள். திருவிளையாடல் திரைப்படத்தின் மூலம் பிரபலமான இந்த குறுந்தொகைப்  பாடலின் பொருளை ஆராய்வோம்.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே

இந்தப் பாடலை இயற்றியவர் “இறையனார்” என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
(சிவாஜி கணேசன் அல்ல).

பொருள் : மலர்களில் மகரந்தங்களை எடுத்து வாழும் அழகிய சிறகுகளை உடைய தும்பியே! எனக்குப் பிடித்ததைக் கூறவேண்டாம்.நீ கண்டுணர்ந்ததைக் கூறு ! பல பிறப்புகளிலும் நட்புடையவளாக இருப்பவளும், மயிலைப் போல மென்மையுடைவளும், அழகிய பல்வரிசை கொண்டவளும், சுமார் 19ல் இருந்து 24 வரை மதிக்கத்தக்க பெண்ணுடைய கூந்தல் நறுமணத்தை விடவும், மணக்கக் கூடியது நீ அறிந்த பூக்களில் ஏதேனும் உள்ளதோ?
(அடேங்கப்பா..!)

இது என்னா “மயிரு” கேள்வி ? இதுக்கு பதிலு தெரியாதா ? இருக்கும்ல என்பது எல்லோருக்கும் தெரியும். ஏன்னா மயிர் ஒரு உயிர்ப் பொருள். எந்த ஒரு உயிர்ப் பொருளுக்கும் அதன் வளர் நிலைகளில் மணம் வேறுபடும். (செடி கொடிகள், விலங்குகள் உட்பட)

ஆனால் நம்ம “செண்பகப் பாண்டியனுக்கு” அதில் தான் பெருத்த சந்தேகம் வந்து விட்டதாம். (நாட்டிலே வேறு பிரச்சனையே இல்லை போலும்). தன் துணைவியுடன் தனிமையில் இருந்த பொழுது அவளின் கூந்தலை நுகர்ந்து, மணம் வருவதை அறிந்து தானும் குழம்பி,  மறுநாள் அவையில் உள்ளோரையும் குழப்பி விட்டான். இந்த டுபாக்கூர் கேள்விக்கு கற்றறிந்த சான்றோர் நிறைந்த அவையில் விடை கிடைக்காததால் பரிசு அறிவிக்கப் பட்டது. பாண்டியனின் ஐயத்தைத் தீர்க்க தருமியின் மூலமாக பாடலை அனுப்பினான் இறைவன்.  பாடலைக் கேட்டவுடன் “தீர்ந்தது சந்தேகம்” என்று பரிசளிக்க விழைந்தான் முத்துராமன்.. மன்னிக்கவும் பாண்டிய மன்னன். பரிசளிக்குமுன் பொருள் குற்றம் கண்டுபிடித்து தடுத்துவிட்டான் நக்கீரன். (போச்சுடா..!)

இதில் எனக்குப் பல உண்மைகள் புலப்படவில்லை.
1)   இந்தப் பாட்டை எழுதியது யார்? இறைவனா அல்லது அவர் பெயரில் வேறு யாரவதா?. இறைவன் தான் என்பதற்கு ஏதாவது தரவு இருக்கிறதா ? இருந்தால் சுட்டி இடவும்.
2)   பாண்டியனின் அவை கற்றறிந்தோர் அவையா ? அல்லது இந்தக் காலத்து முதல்வர்களுக்கு சலாம் போடும் அவை போன்றதா ?
3)   எல்லாம் அறிந்தவராகக் கருதப்படும் நக்கீரனோ பொருள் குற்றம் கண்டுபிடிக்கிறான். பொருளிலா குற்றம் ?. பூலோகப் பெண்களன்றி தேவலோகப் (??!!) பெண்டிருக்கும், முக்கண் முதல்வனின் துணைவிக்கும் (?!) கூந்தல் மணமில்லையாம். (என்னப்பா இது..?)
4)   நெற்றிக்கண்ணால் சுட்ட பின், பொற்றாமரைக் குளத்திலிருந்து மீண்டெழுந்து வந்த பிறகும் பொருளில் தான் குற்றம் என்று சாதித்தான் நக்கீரன். இறைவனும் புத்தி புகட்டாமல் சரி என்று ஒத்துக் கொண்டதாய்த் தெரிகிறது.
5)   கொஞ்சம் வாதாடினால் இறைவனிடமே பொய்யை உண்மை என்று சாதித்து விடலாமா ?
6)   திருவிளையாரற்புராண உரைப்படி தான் படம் எடுக்கப் பட்டதா ?

விடை தெரிந்தவர்கள் கூறுங்கள். கும்முபவர்கள் கருத்துரைகளில் கும்மலாம்.



பயம்

முகபுத்தகத்தில் இன்று கண்டது..



சிலேடை

சிலேடை (Double meaning, tripple meaning sometimes quadrable meaning..!)
ஆம்.. தமிழில் சிலேடை என்பது இரு பொருள் மட்டும் அல்ல. பல பொருட்களை சுட்டுவதற்கும் இந்தப் பெயர் உண்டு.
இதனை பாடல்களாலும் எடுத்து ஆண்ட புலவர்கள் உண்டு. அவர்களுள் சிறந்தவர் கவி காளமேகம். 
இவருடைய  குறிப்பு விக்கி பெடியாவில் இருந்து :
காளமேகம் 15 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். சமண சமயத்தில் பிறந்த இவர், திருவானைக்கா கோவிலைச் சேர்ந்த மோகனாங்கி என்பவளிடம் ஆசை கொண்டார். இதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த சைவ சமயத்துக்கு மாறினார். இவர் வசைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர் என்று கூறப்படுகின்றது. ஆனாலும் இவர் பல சிறந்த நயம் மிகுந்த பாடல்களையும் பாடியுள்ளார். இவர் பாடிய சிலேடைப் பாடல்களும், நகைச் சுவைப் பாடல்களும் பல உள்ளன. சமயம் சார்ந்த நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். இவர் ஒரு ஆசு கவி ஆவார். 
ஆசுகவி எனப்படுவோர் எடுத்த மாத்திரத்திலே கவி பாடக்கூடிய திறமை படைத்த புலவர்களைக் குறிக்கும்.


திருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திர மடல் முதலியவை இவர் இயற்றிய நூல்களாகும்.

திருவரங்கத்து கோவிலில் பரிசாரகர் (சமையல் செய்பவர்) இருந்தார். திருவானைக்காவில் சிவத் தொண்டு செய்து வந்த மோகனாங்கி என்ற பெண் மீது மாளாக்காதல் கொண்டு இருந்தார். அவள் பொருட்டு ஒரு நாள் அங்குச்சென்று கோவிலின் உட்புற பிராகாரத்தில் அவள் வரவுக்காகக் காத்திருக்கையில் தூக்கம் வர படுத்து உறங்கிப்போனார். அப்பெண்ணும் இவரைத் தேடிக் காணாமல் திரும்பிச்சென்றுவிட்டாள். கோவிலும் திருக்காப்பிடப்பட்டது. அக்கோவிலின் மற்றொரு பக்கத்தில் ஓர் அந்தணன் சரசுவதி தேவியை நோக்கி தவங்கிடந்தான். சரசுவதிதேவி அதற்கிணங்கி அவன் முன்தோன்றித் தமது வாயில் இருந்த தாம்பூலத்தை அவ்வந்தணன் வாயிலுமிழப் போக அதை அவன் வாங்க மறுத்ததால் சினந்து அத்தாம்பூலத்தை வரதன் (காளமேகத்தின் இயற்பெயர்) வாயில் உமிழ்ந்துச் சென்றாள். வரதனும் தன் அன்புக் காதலி தான் அதைத் தந்ததாகக் கருதி அதனை ஏற்றுக்கொண்டான். அது முதல் தேவி அனுக்கிரகத்தால் கல்லாமலே கவி மழை பொழியத்தொடங்கினான். அதனாலேயே வரதன் என்ற பெயர் மாறி காளமேகம் என மாறிற்று.

அவர் பாடிய பாடல்களுல் சிலவற்றை இந்த வாரத்திலிருந்து பார்ப்போம்.

முதலில் பாடலை அப்படியே பார்ப்போம்.
சங்கரர்கு மாறுதலை; சண்முகற்கு மாறுதலை;
ஐங்கரர்கு மாறுதலை ஆனதே; - சங்கைப்
பிடித்தோர்க்கு மாறுதலை; பித்தாநின் பாதம்
படித்தோர்க்கு மாறுதலைப் பார்.
இங்கு மாறுதலை என்பது முறையே சிவன், முருகன், வினாயகர், பெருமாள் மற்றும் சிவனடியார் ஆகியோர்க்கு உகந்து வந்துள்ளமையைக் காண்க.
பொருள்:
சங்கரர்கும் ஆறுதலை – சிவனுக்கு கங்கையாகிய ஆறு தலையிலுண்டு
சண்முகற்கும் ஆறுதலை – முருகப் பெருமானுக்கும் ஆறு முகமுண்டு.
ஐங்கரர்கு மாறுதலை – ஐந்து கைகளையுடைய வினாயகனுக்கு மாற்றப்பட்ட தலை.
சங்கைப் பிடித்தோர்க்கு மாறுதலை – விஷ்ணுவுக்கு வெவ்வேறு அவதாரங்களில் மாறுபட்ட தலைகள்.
பித்தாநின் பாதம் – பித்தனாகிக சிவனே! நின் பாதம்
படித்தோர்க்கும் ஆறுதலைப்பார் – பணிந்தோர்க்கும் ஆறுதல் கிடைக்கப் பெறுவதைப் பார்க்க.
ஆகவே இவன் double meaning-ல பேசறான் என்று யாரையும் குற்றம் சொல்ல வேண்டாம். அப்போவே பேசிட்டோம்ல..!
கருத்துக்களைப் பின்னூட்டங்களில் இடவும்.




இது கடவுள் வாழ்த்து அல்ல..!

வலைபதிவினை தொடங்கும்போது கடவுள் வாழ்த்துடன் தொடங்கவும்
என்று எனது நண்பர்கள் அறிவுறுத்தினர். 
எனவே கடவுள் வாழ்த்துப் பாடல் என்று பெரும்பாலனவர் கருதும்
"பிள்ளையார் பாடலுடன்" எனது வலைபதிவினை தொடங்குகிறேன்.

ஆனால் கடவுள் வாழ்த்தாக அல்ல..!

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு 

துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம் 

தப்பாமல் சார்வார் தமக்கு.


நல்ல சொல் வரும்; நல்ல மனம் வரும் (அமைதியான குணம் வரும்); 
நல்ல கண் பார்வை உண்டு; உடல் நலம் குறையாது. எப்போது ?
துப்பார் திருமேனியும் தும்பையும்
(தூய்மையான குப்பை மேனி தாவரத்தையும், தும்பை  பூவையும்)
தவறாது உணவிலும் உடலிலும் சேர்த்துக் கொள்பவர்க்கு.

கவனியுங்கள் தோழர்களே !!.
இங்கே பிள்ளையார் எங்கே வந்தார் ?? எனவே இது கடவுள் வாழ்த்து அல்ல.


குப்பை மேனியின் பயன்கள்.
         இந்த செடியினை கிராமத்தில் இருந்தவர்களுக்கு நன்றாக தெரிந்து இருக்கும். இதனை தெருவின் அழகி, பூனை வணங்கி என்றும் சொல்வார்கள். எந்த வகை புண்ணாக இருந்தாலும் குப்பை மேனி இலையை வைத்துக் கட்டினால் ஆறும்.

 குப்பை மேனியைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள 

தும்பை பற்றித் தெரிந்து கொள்ள
http://mooligaivazam-kuppusamy.blogspot.in/2008/02/blog-post_21.html (நன்றி திரு குப்புசாமி)

இணையத்தில் உலாவிப் பாருங்கள் நண்பர்களே. இதைத்தான் நம் அவ்வையார் மூதுரையில் 
குறிப்பிட்டுள்ளார். இங்கு பிள்ளையார் (அ) விநாயகர் எங்கிருந்து வந்தார் ?

இந்த குப்பை மேனி இலையுடன் கொஞ்சம் உப்பும், மஞ்சள் துண்டு சேர்த்து அரைத்து உடம்பில் ஏற்பட்டுள்ள சொறி, சிரங்கின் மேல் தடவி அரைமணி நேரம் ஊறவிட்டு கழுவ விரைவில் குணமாகிவிடும். குப்பை மேனி இலையை வதக்கி, பிழிந்து 2துளி சாறெடுத்துக் காதில் ஊற்றினால் காதுவலி நீங்கும். இந்த குப்பை மேனி செடியில் புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. 

குப்பைமேனி (Acalypha indica) ஒரு மருத்துவ மூலிகைகச் செடியாகும். ஓராண்டுத் தாவரமான இச்செடி இந்தியாஇலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. குப்பைமேனியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்பாடு உடையனவாகும்.

[தொகு]மருத்துவ குணங்கள்

இலை மலம் இளக்கியாகும்
  • சொறி, சிரங்கு, உடல் அரிப்புக்கு மேற்பூச்சாகவும் பயன்படுகிறது
  • இலைச் சாறு பாம்புக்கடி நஞ்சினை முறிக்கவும் பயன்படுகிறது.
  • நெஞ்சுச் சளியை இளக்கி வெளியேற்றவும் பயன்படுகிறது
  • இதன் வேர் பேதி மருந்துத் தயாரிப்பில் பயன்படுகிறது

தும்பை


Leucas aspera in Hyderabad, India.
தும்பை (Leucas Aspera) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். 50 சென்றிமீட்டர் 
வரை உயரமாக வளரும்  இதன் இலையும் பூவும் மருத்துவக் குணமுடையன.
 இலங்கையின் சில ஊர்களிற் தும்பங்காயைக் கறி 
சமைத்து உண்பர்.இலையின் மருத்துவ குணங்கள் 
குடற் புழுக்களை வெளியேற்றும்
  • வயிற்று வலியைக் குணப்படுத்தும்
  • மாதவிலக்கைத் தூண்டும்
  • சளியை இளக்கி வெளிப்படுத்தும்
(நன்றி விக்கிபீடியா)



இது எனது புதிய வலை.

முதலில் வெட்டி ஒட்டும் படலம் ஆரம்பமாகும். 
பின்னர் தான் சொந்த இடுகைகள் தொடரும்.

இவண்

விஜயன் 

BTemplates.com

Blogger இயக்குவது.

Advertisement

ABOUT ME

I could look back at my life and get a good story out of it. It's a picture of somebody trying to figure things out.