இறைவன்
“மயிரு” பாட்டு
இந்தப் பாடலை பெரும்பான்மையானவர்கள்
அறிந்திருப்பார்கள். திருவிளையாடல் திரைப்படத்தின் மூலம் பிரபலமான இந்த குறுந்தொகைப் பாடலின் பொருளை ஆராய்வோம்.
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே
இந்தப் பாடலை இயற்றியவர்
“இறையனார்” என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
(சிவாஜி கணேசன் அல்ல).
பொருள் : மலர்களில் மகரந்தங்களை எடுத்து வாழும் அழகிய சிறகுகளை உடைய
தும்பியே! எனக்குப் பிடித்ததைக் கூறவேண்டாம்.நீ கண்டுணர்ந்ததைக் கூறு ! பல பிறப்புகளிலும் நட்புடையவளாக இருப்பவளும், மயிலைப் போல மென்மையுடைவளும், அழகிய பல்வரிசை
கொண்டவளும், சுமார் 19ல் இருந்து 24 வரை மதிக்கத்தக்க பெண்ணுடைய கூந்தல் நறுமணத்தை
விடவும், மணக்கக் கூடியது நீ
அறிந்த பூக்களில் ஏதேனும்
உள்ளதோ?
(அடேங்கப்பா..!)
இது என்னா “மயிரு” கேள்வி ? இதுக்கு பதிலு தெரியாதா
? இருக்கும்ல என்பது எல்லோருக்கும் தெரியும். ஏன்னா மயிர் ஒரு உயிர்ப் பொருள். எந்த
ஒரு உயிர்ப் பொருளுக்கும் அதன் வளர் நிலைகளில் மணம் வேறுபடும். (செடி கொடிகள், விலங்குகள்
உட்பட)
ஆனால் நம்ம “செண்பகப் பாண்டியனுக்கு” அதில் தான்
பெருத்த சந்தேகம் வந்து விட்டதாம். (நாட்டிலே வேறு பிரச்சனையே இல்லை போலும்). தன் துணைவியுடன்
தனிமையில் இருந்த பொழுது அவளின் கூந்தலை நுகர்ந்து, மணம் வருவதை அறிந்து தானும் குழம்பி,
மறுநாள் அவையில் உள்ளோரையும் குழப்பி விட்டான்.
இந்த டுபாக்கூர் கேள்விக்கு கற்றறிந்த சான்றோர் நிறைந்த அவையில் விடை கிடைக்காததால்
பரிசு அறிவிக்கப் பட்டது. பாண்டியனின் ஐயத்தைத் தீர்க்க தருமியின் மூலமாக பாடலை அனுப்பினான்
இறைவன். பாடலைக் கேட்டவுடன் “தீர்ந்தது சந்தேகம்”
என்று பரிசளிக்க விழைந்தான் முத்துராமன்.. மன்னிக்கவும் பாண்டிய மன்னன். பரிசளிக்குமுன்
பொருள் குற்றம் கண்டுபிடித்து தடுத்துவிட்டான் நக்கீரன். (போச்சுடா..!)
இதில் எனக்குப் பல உண்மைகள் புலப்படவில்லை.
1)
இந்தப் பாட்டை எழுதியது யார்? இறைவனா அல்லது அவர்
பெயரில் வேறு யாரவதா?. இறைவன் தான் என்பதற்கு ஏதாவது தரவு இருக்கிறதா ? இருந்தால் சுட்டி
இடவும்.
2)
பாண்டியனின் அவை கற்றறிந்தோர் அவையா ? அல்லது
இந்தக் காலத்து முதல்வர்களுக்கு சலாம் போடும் அவை போன்றதா ?
3)
எல்லாம் அறிந்தவராகக் கருதப்படும் நக்கீரனோ பொருள்
குற்றம் கண்டுபிடிக்கிறான். பொருளிலா குற்றம் ?. பூலோகப் பெண்களன்றி தேவலோகப்
(??!!) பெண்டிருக்கும், முக்கண் முதல்வனின் துணைவிக்கும் (?!) கூந்தல் மணமில்லையாம்.
(என்னப்பா இது..?)
4)
நெற்றிக்கண்ணால் சுட்ட பின், பொற்றாமரைக் குளத்திலிருந்து
மீண்டெழுந்து வந்த பிறகும் பொருளில் தான் குற்றம் என்று சாதித்தான் நக்கீரன். இறைவனும்
புத்தி புகட்டாமல் சரி என்று ஒத்துக் கொண்டதாய்த் தெரிகிறது.
5)
கொஞ்சம் வாதாடினால் இறைவனிடமே பொய்யை உண்மை என்று
சாதித்து விடலாமா ?
6)
திருவிளையாரற்புராண உரைப்படி தான் படம் எடுக்கப்
பட்டதா ?
விடை தெரிந்தவர்கள் கூறுங்கள். கும்முபவர்கள்
கருத்துரைகளில் கும்மலாம்.
0 Comments:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்