சிலேடை
நன்றி.
சிலேடையின் பொருள்
சிலேடை என்பது
ஒரு சொல்லுக்குப் பல பொருள் வழங்கப் பெற்று வருவது என்பது அனைவரும் அறிந்ததே. “சொல்லுக்கு
மட்டும்” என்ற எண்ணத்தில் இருந்து சற்றே வழூவி “செயலுக்கும்” அல்லது “அறிவுக்கும்”
என்று சிந்தித்துப் பார்த்தால் என்ன என்று தோன்றிற்று. அதன் தாக்கமே இந்த பதிவு.
சற்றே ஆழ்ந்து
சிந்தித்தால், நாம் அனைவருமே ஏறக்குறைய “சிலேடை” வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
பொதுப்புத்தியில் அனைவரும் “நல்லவராக” வாழ்ந்து
கொண்டிருக்கிறோம். அல்லது வாழ்வதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நடைமுறையில்
ஒரு வாழ்க்கையா வாழ்கிறோம் ? சில சமயம் இரட்டை வாழ்க்கை, சில சமயம் இரண்டுக்கு மேற்பட்ட
வாழ்க்கை என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.
உதாரணமாக, ஏதோ
ஒன்றை நண்பரிடம் சொல்லி விடுகிறோம். அது தவறாகி விட்டால் செய்த தவறை பெரும்பாலோர் ஒத்துக் கொண்டிருக்கிறோமா என்றால் இல்லை. அந்த தவறுக்கு
வியாக்கியானம் சொல்லி சரியாக்குகிறோம். நல்லதோ கெட்டதோ நம்மிடம் கேட்பவர்கள் நாம் எந்த
மொழி வீச்சில் சொல்கிறோமோ அந்த வீச்சில் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அதைப் படிப்பவர்கள்
அதே வீச்சில் எடுத்துக் கொள்வார்கள் என்று சொல்வதற்கில்லை.
தத்துவ நூல்களாகக்
கருதப் படுகின்ற கீதை போன்ற நூல்களையும் சிலேடைகளாகத் தான் புரிந்து கொண்டிருக்கிறோம்.
பெரியாருடைய தத்துவங்களையும் சிலேடைகளாகத்
தான் புரிந்து கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறோம். எண்ணங்களைப் பொறுத்தே வாழ்வு
பெரும்பாலும் அமைகிறது. ஆழ்ந்து சிந்தித்தால் மட்டுமே உண்மை விளங்கும்.
எப்பொருள் யார்யார்
வாய் கேட்பினும், எப்பொருள் எத்தன்மையது ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது தான்
உண்மையான அறிவு என்று நம்ம தாத்தா 2000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இருக்கிறார். (இந்த
மாதிரி சிலேடை இல்லாமல் வாழ்வியல் தத்துவத்தை இனிமே ஒருத்தன் பொறந்து தான் சொல்லனும்…
அப்பொ கூட அது நம்ம தாத்தா சொல்லாததா என்று ஆராய்ந்து பார்த்தால் தெரிந்துவிடும்).
ஆகவே சிலேடையாக
வாழாமல் சிம்பிளாகவும், சிங்கிள் வாழ்க்கையாகவும் (சிங்கிளாக அல்ல…!) வாழ்வது தான் சாலச் சிறந்தது.
இல்லாவிட்டால்…
இப்படி இருப்பது..
இப்படி ஆயிடும்..!
நன்றி.
0 Comments:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்